பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர்- ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியம் ஃபொக்ஸ்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை இன்று சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தின் அழைப்பையேற்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்த பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியம் ஃபொபக்ஸ்,அமைச்சர் பசில் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இதனையடுத்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியம் ஃபொக்ஸ் நாட்டிலிருந்து நாளை இரவு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக நியோமல் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment