Saturday, July 2, 2011

கேள்விக்குறியாகிறது யூரோ நாணயம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, யூரோ நாணயத்தை கைவிட்டு, பழைய நாணயமான, “டச்மார்க்’கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரே மாதிரியாக யூரோ நாணயத்தைப் பயன்படுத்தி வருகின்றன.இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கியான, பண் டெஸ் வங்கி, “டச்மார்க்’ சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளது என்றும் இதையடுத்து “டச்மார்க்’ சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளி யிட்டுள்ளன.

“டச்மார்க்’ நாணயத்தின் தனித்துவத்தை இழக்காமல், மீண்டும் அதே நாணயத்தை வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை விட்டு வந்தனர்.

மேலும், வர்த்தக ரீதியில் டாலருக்கு அடுத்ததாக நல்ல முதலீட்டை, “டச்மார்க்’ நாணயம் ஈர்த்து வந்தது. யூரோ நாணயத்தைப் பெற்றிருக்கும் கிரீஸ் நாடு, தற்போது, திவாலாகியுள்ளது.

இந்நிலையில், யூரோ கரன்சியின் மதிப்பை அனைத்துலக அளவில் நிலை நிறுத்த வேண்டுமானால், கிரீஸ் நாட்டை திவாலில் இருந்து ஐரோப்பிய நாடுகள் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால், யூரோ நாணயத்தின் மதிப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகி உள்ளதால், ஜெர்மன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள், “டச்மார்க்’ நாணயத்துக்கு மாற வேண்டும் என்று, கோரி வருகின்றனர்.

இது தொடார்பாக, ஜெர்மநி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், “யூரோ நாணயத்துக்கு எதிர் காலம் இல்லை என்று, 71 விழுக் காடு மக்களும் அந்த நாணயத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று, 19 விழுக்காட்டினரும் வாக்களித்துள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com