நீ வாயை மூடு... கருணாவிற்கு சம்பந்தன் சபையில் எச்சரிக்கை.
வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றபோது பெரும்பான்மையின அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், உறுப்பினர்கள் அமைதியாகவும் கவனமாகவும் விவாதத்தை அவதானித்துக்கொண்டிருந்தபோது தமிழ், முஸ்லிம் பிரதியமைச்சர்களும் எம்.பி.க்களுமே இடையூறுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.
பிரேரணையை முன்வைத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த போது பிரதியமைச்சர் முரளிதரன் இடையூறுகளை ஏற்படுத்தினார். இதனால் சினமடைந்த சம்பந்தன் “வாயை மூடு’ எனக்கூறி பிரதியமைச்சர் முரளிதரனை அடக்கினார்.
இதேபோன்று அநுரகுமார திசாநாயக்க உரையாற்றிக்கொண்டிருந்தபோது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இடையூறுகளை ஏற்படுத்தினார். இதனால் அநுரகுமாரவுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தர்க்கம் ஏற்பட்டது. வாயை மூடிக்கொண்டிருக்காவிட்டால் விமான சேவைகள் பிரதியமைச்சராகவிருந்தபோது காட்டிய விளையாட்டுக்களை சொல்லவேண்டி வருமென அநுரகுமார திசாநாயக்க எச்சரித்ததும் ஹிஸ்புல்லா அமைதியாகிவிட்டார்.
இதேபோன்று, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. பேசியபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து அரசுப் பக்கம் தாவிய பியசேன எம்.பி. குறுக்கீடுகளை செய்துகொண்டிருந்தார். ஐ.தே.க. எம்.பி.யான ஆர்.யோகராஜன் பேசியபோது பிரதியமைச்சர்களான முரளிதரன், ஹிஸ்புல்லா மற்றும் எம்.பி.க்களான அஸ்வர், பியசேன ஆகியோர் குறுக்கீடுகளை செய்ததுடன் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான இரா. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பேசியபோது அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜோன் செனவிரட்ன ஆகியோர் பண்பான முறையில் சில விளக்கங்களை மட்டும் அதுவும் உரையாற்றிக்கொண்டிருந்த உறுப்பினர்களின் அனுமதியுடன் விளக்கங்களை வழங்கினர்.
இதேவேளை, அமைச்சர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களை தமதுரையில் கூறியபோதும் இந்த பிரதியமைச்சர்களும் உறுப்பினர்களுமே மேசைகளில் தட்டி வரவேற்றுக்கொண்டிருந்தனர்.
2 comments :
Parliament is the place where the representatives elected by the people represent with some sort repect,parliamentary values should be repected even by the elderly parliamentarians as well as by the younger parliamantarians
Killers have became parliamentarians. That is why the parliament had lost its dignity.
The JR's PR has to be blamed for unfortunate situation in the country.
Post a Comment