வெளிநாட்டு கடவுச்சீட்டுள்ளோர் யாழ் செல்லத் தேவையான பாஸ் நடைமுறை நீக்கம்.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு நீக்கிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் ஏ-9 வீதி ஊடாக ஓமந்தை சோதனைச் சாவடியைக் கடந்து வடக்கே செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன்அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுப்பாட்டையே நேற்றுத் தொடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறையால், வடபகுதியில் உள்ள தமது உறவினர்களைப் பார்வையிடச் செல்லும் புலம்பெயர் தமிழர்கள் சில சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் இத்தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
0 comments :
Post a Comment