வடகிழக்கில் பழங்குடியினரின் அடையாளங்களை உறுதிப்படுத்தக்கோருகின்றார் வேடுவத்தலைவன்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் பழங்குடியினரின் அடையாளங்கள் உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு வேடுவத்தலைவன் உறுவாறிகே வன்னிலா அத்தோண ஜனாதிபதியை கேட்டுகொண்டுள்ளார்.
எதிர்வரும் 30ம் 31ம் திகதிகளில் இடம்பெறவிருக்கும் உலக பழங்குடியினர் நாள் விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க கண்டியிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது மேற்கண்ட வேண்டுதலை அவர் விடுத்துள்ளார்:
மேற்படி விழா வாகரைப்பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். இவ்விழாவில் நாடுமுழுவதும் வாழும் வேடுவர்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் புலிகள் காடுகளில் பதுங்கியிருந்தபோது வேடுவர்கள் புலிகளுக்கு பல வழிகளிலும் உதவியிருந்தமையும் , புலிகள் இவர்களை தவறான வழிகளில் பயன்படித்தியிருந்தமையும் பலரும் அறியாத விடயங்கள்.
1 comments :
Veddahas have their own history.They are a part of our"Ceylon History".Their tradition and culture
are very interesting.The government
must help them and try to promote their social needs and protect them for ever.
Post a Comment