அமைச்சரவைப் பத்திரங்களை மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கவும் - ஜனாதிபதி
அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான வழிகாட்டல் கோவை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்த போதே சகல அமைச்சரவைப் பத்திரங்களையும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.அமைச்சரவைப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கும் இணைப்புகள், சட்டமூலங்கள், மக்கள் அறிந்து கொள்வதற்காக வெளியிடப்படும் ஆவணங்கள், சுற்று நிருபங்கள், நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் ஒப்பந்தங்கள் போன்றவை மும்மொழிகளிலும் முன்வைக்கப்பட வேண்டும் என வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆவணங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் பயன்படுமானால் அவற்றை மொழி பெயர்க்கத்தேவையில்லை எனவும் அவற்றைத் தயாரிக்கப்பட்ட மொழியிலேயே முன்வைக்கலாம் எனவும் அந்த வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment