Thursday, July 28, 2011

தென் கொரியாவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம்

அணு சக்தியை ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்கான உடன்பாட்டில் தென் கொரியாவும் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளன. தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக்கும் இந்திய அதிபர் பிரதிபா பாட்டீல் அந்த உடன்பாட்டில் கையெழுத் திட்டனர்.

இந்தியாவில் அணுசக்தி தொழில் நுட்பங்களை தென் கொரியா ஆராய இந்த உடன்பாடு வகை செய்கிறது. கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு இந்திய அதிபர் பிரதீபா பாட்டீல் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் ஞாயிற்றுக்கிழமை தென் கொரியத் தலைநகர் சோல் சென்றடைந்தார்.

இரு நாடுகளின் அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை திங்கள் கிழமை நடைபெற்றது. தொடர்ந்து பிரதிபா பாட்டீல்-தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கு இடையேயான அணுசக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், தகவல் தொடர்பு பரிமாற்றம், இருநாட்டு மக்களின் சமுதாயப் பாதுகாப்புக் கான நிர்வாக உதவிக்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகளுடனான ஒப்பந்தத்துக்குப் பிறகு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, மங்கோலியா, கஜகஸ்தான், ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து 9-வது நாடாக அணுசக்தி ஒப்பந்தத்தில் தென் கொரியா இந்தியாவுடன் கையெழுத் திடுவது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளும் இணைந்து ராணுவத் தளவாடப் பொருள் தயாரிப்பில் ஈடுபடுவது, அதற்கான தொழில் நுட்பங் களை பரிமாறிக் கொள்வது, அவற்றுக் கான ஆராய்ச்சியை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப் பட்டதாக இந்தியுஉயர்அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment