வித்தியாசமான ஒரு 'மாவீரர் தினம்'
வெருகல் படுகொலை'யின் 7வது நினைவு தினம், அண்மையில் வெருகல் கதிரவெளி மலையடிவாரத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாகக் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த பதாதையில் 'வெருகல் படுகொலை மாவீரர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மிகவும் சோகமயமாக நடைபெற்ற இந்த வைபவத்தில, தங்களின் உறவுகளை பிரபாகரனின் புலி பாசிசவாதிகளிடம் பறிகொடுத்த சுமார் 1000 வரையிலான பொதுமக்களும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பல மாகாணசபை உறுப்பினர்கள், வெருகல் பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வெருகல் படுகொலைகள் 2004 ஏப்ரல் 9ம் திகதி புலித் தலைமையால,; தமது சக போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தமது இயக்கத்தை விட்டு கருணா தலைமையில் பிரிந்து சென்ற சுமார் 520 கிழக்கைச் சேர்ந்த போராளிகளை, பிரபாகரனுக்கு விசுவாசமான வடக்குப் புலிகள் வெருகல் ஆற்றைக் கடந்து வந்து, துடிக்கப் பதைக்க படுகொலை செய்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த சம்பவமே இந்த வெருகல் படுகொலையாகும். அவர்களில் இருந்த சுமார் 200 வரையிலான பெண் போராளிகளை
(பெரும்பாலும் பதின்ம வயதுச் சிறுமியர்) கதறக்கதற பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி விட்டே, பிரபாகரனின் துப்பாக்கிப் பிசாசுகள் அந்தப் பிஞ்சுகளைச் சுட்டுப் பொசுக்கினர்.
அந்த துயர சம்பவத்தை நினைவு கூர்ந்தே இந்த வித்தியாசமான 'மாவீரர் தினம்' வெருகலில்
அனுஸ்டிக்கப்பட்டது. சரியாக மாலை 6.01க்கு படுகொலை செய்யப்பட்ட போராளிகளை நினைவு கூர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டன. கொலை செய்யப்பட்டவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் அழுது புலம்பினர். சிலர் துயரம் தாளாது மயக்கமுற்று விழுந்தனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்சசியின் போது, உணர்ச்சிபூர்வமான பாடல்கள், கவிதைகள் என்பனவும் ஒலிபரப்பப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் மட்டுமின்றி, புலிகளின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பல முஸ்லம் மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
1 comments :
வெருகல் கொலைகள் மட்டுமல்ல அதற்கு முன்னர் எத்தனை ஆயிரம் அநியாய, பரிதாப தமிழ் கொலைகளை செய்து முடித்துள்ள புலிகளை வெளிநாடுகளில் வாழும் தமிழ் கூட்டம் தட்டிக்கேட்டதில்லை.
கவலைப்பட்டதுமில்லை. அதேபோல் கடைசியில் வன்னியில் புலிகளால் பலிக்கடாக்களாக்கப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களின் இழப்புகள்,
அழிவுகளைப் பற்றி உண்மையாக கவலைப்படவும் இல்லை, அக்கறைப்படவும் இல்லை.
அப்போது அவர்களின் கவலைகள், நோக்கங்கள் எல்லாம் வேறு.
அதுவே அவர்களின் சுயநல சிந்தனையின் உச்சக்கட்டம்.
என்றும் வெறுக்கப்பட வேண்டிய சொந்த இனத்துரோகக் கூட்டம்.
அதுவே தமிழினத்தின் சாபக்கேடு!
Post a Comment