Thursday, July 28, 2011

மாற்றத்தினை தேடும் தமிழ் மக்கள் ! தேசத்தின் ஐக்கியத்தில் நாட்டம்! ! துறையூர் காசி

நடந்து முடிந்த உள்ளுரர்சி மன்றத் தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் தமிழ்த்த தேசிய தலைமைக்கும் சொல்லியிருக்கும் செய்தி என்ன ? சார்பு நிலைகளுக்கு அப்பால் நின்று கொண்டு தமிழ்ப் பேசும் மக்களது எண்ணங்களை அவர்களது ஆரவத்தோடு கூடியதான அபிலாசைகளை சற்று உன்னிப்பாக கவனிக்கின்ற ஒவ்வொருவருக்கும் தமிழ்ப் பேசும் மக்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்ற ஆதங்கத்தினை சரிவரப் புரிந்து கொள்ளமுடியும் என்றே நான் கருதுகின்றேன்.

ஐனநாயக வழி முறை அதன் நியதி கோட்பாடு போன்றவற்றிற்கு இணங்க தமிழ் தேசியக்
கூட்டமைப்பினர் தாம் போட்டியிட்ட 26 உள்ளுணுராட்சி மன்றங்களில் 20 சபைகளை மாத்திரம் தமதாக்கிக் கொண்டுள்ளனர் இவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 சபைகளையும் கிளிநொச்சி 3 அம்பாறை 2 முல்லைத்தீவு 1 திரிகோணமலை 1 போன்றவற்றில் கூட்டு மொத்தமாக 7 சபைகளையும் தமதாக்கிக் கொண்டனர்.

மேற் குறிப்பிட்ட ஐனநாயக விளுமியங்களின்படி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்
என்பது முளுதான உண்மையாகும்.. ஆயினும் இந்த வெற்றியினை சாட்சியப்படுத்தி அல்லது முன்னிலைப்படுத்தி இன முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி வரும் தமிழ்த் தேசியவாத அரசியலை அதனை பிரதான அரசியல் கோட்பாடாக பல சகாப்தங்களாக அரசியல் செய்து வரும் தமிழ்த் தேசியத தலைமைகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை ஒட்டு மொத்த மக்களும் அஙகீகரித்து விட்டார்கள் என்ற பிரகடனமானது முளுக்க முளுக்க
தவறானது. ஏன்பதையும் தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு தொகையினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை முற்றாக நிராகரித்திருக்கும் நிலைப்பாட்டினை மூடி மறைக்கின்ற முயற்சி என்பதையும் இஙகு குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.

யாழ் மாவட்டத்துக்குள் உட்பட்ட தீவகத்தில் நடந்தேறிய 3 உள்ளு10ராட்சி சபைகளிலும் போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு படு தோல்வியினைச் சந்தித்திருக்கின்றது. தீவக தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை முற்றுமுளுதாக நிராகரித்துள்ளார்கள்.-

இலங்கைத் தீவின் தலைப் பகுதியில் தமிழ்த் தேசியம் நிராகரிக்கப்பட்டிருப்பதானது அதன் அஸ்த்தமனத்தினை முன்னறிவிப்பு செய்த நிகழ்வாகவே பார்க்க முடிகின்றது. முளுக்க முளுக்க விவசாயம். கடற்றொழில், பனம்பொருள் உற்பத்தி மற்றும் சிறு கைத்
தொழிலில் போன்ற தொழிலகளை மேற்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தினை உள்ளடக்கிய தீவக மக்களால் தமிழ்த் தேசியம் நிராகரிக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுத் திருப்பம் என்று சொன்னால் அது மிகைப்படுத்தப்பட்டதல்ல.பொது வாக சொல்லுமிடத்து உழைக்கும் மக்கள் மத்தியில் ஓர் புதிய மார்க்கத்தினை தேடும் ஆர்வம் பிறந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியவாத அரசியல் தலைமையின் ஏமாற்றுத் தன்மை புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. நிலைமைகள் இப்படியிருக்கின்ற பொளுது தமிழ் மக்கள் ஏகோபித்த
ஆதரவினை தமக்கே வழங்கி விட்டார்கள் எனவே தம்முடன் மட்டும தான அரசு தமிழ் மக்களது அரசியல் தீர்வு தொடர்பான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவரகள் மற்றும் சிவாஐpலிஙகம் போன்றோரது தன்னிச்சையான பிரகடனங்கள் யதார்த்த நிலைமைகளுக்கு அப்பாற்பட்டதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும்.

யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச சபைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கெதிராக 50044 வாக்குகள் பதிவாகியுள்ளன இவற்றை விட கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற 3 சபைகளில் மொத்தம் 11414 வாக்குகளும் அம்பாறை மாவட்டத்தில் 2 சபைகளில் 6400 வாக்குகளும் திரிகோணமலை மாவட்டத்தில் மொத்தம் 4 சபைகளில் 36155 வாக்குகளும் தமிழ்த தேசியக கூட்டமைப்புக்கு எதிராக பதிவாகியுள்ளன.

மேற்குறித்த தரவுகள் தரும் செய்திகளின்படி பெருமளவிலான தமிழ் பேசும் மக்கள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் யதார்த்தத்துக்கு புறம்பான அரசியல் நகர்வுகளை. நிராகரிததிருப்பதன் மூலம் தமிழ் சிங்கள மக்களுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதன் மூலமே சுமுகமான அரசியல் தீரவினை கண்டுகொள்ளமுடியும். ஏன்பதையும். தேசிநிய இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வளர்க்கும் அரசியல் தலைமை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இனியும் உயிர வாழ முடியாது என்பதனையும் ஆணித்தரமாக அடக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

கடந்த அறுபது ஆண்டு காலமாக தமிழ்த் தேசியவாத தலைமைகளால் வளர்க்கப்பட்டு வந்த இன மொழி விரோத அடிப்படையிலான பிற்போக்குத்தனமான அரசியலலுக்குள் மிக இறுக்கமாக கட்டப்பட்டிருக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் தாம் தவறாக வழி நடத்தப் படுகின்றோம் என்பதை உணர்ந்து தம்மைச் சுற்றி பின்னப்பட்டிருந்த இன மொழி பகைமை அரசியலை உடைத்துக் கொண்டு மெல்ல மெல்ல வெளியேறத் தொடங்கி விட்டார்கள் என்பதையும் இந்த தேர்தல் எமக்கு வெளிச்சப்படுத்தியிருக்கின்றது.

No comments:

Post a Comment