பாடசாலை மாணவர்களின் தகாத செயல் தொடர்பில் பெற்றோரை தெளிவுபடுத்த நடவடிக்கை.
பாடசாலை மாணவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதை தடுப்பது தொடர்பில் பெற்றோரை தெளிவுபடுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுபாடசாலை அபிவிருத்தி சஙகங்களுக்குதமது பரதிநிதிகளை அனுப்பி அது தொடர்பாக தெளிவுபடுத்த உள்ளதாக அதிகார சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டார். இந்த செயற்றிட்டம் மேல் மாகாண பாடசாலைகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிள்ளைகளின் ஏக பாதுகாவலர்களாக பெற்றோரே விளங்குவதால் வீட்டில் பிள்ளைகளுடன் சிறிது நேரத்தை ஒதுக்குவதோ அல்லது சுமுக தொடர்பினை பேணுவதோ அத்தியவசியமாகும் என்றும் அனோமா திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வேன்கள் குறித்து பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பெற்றோரை தெளிவு படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment