இலங்கை தமிழர்களின் குறைகளை தீர்க்க அரசு தவறிவிட்டது - ஐசிஜி
பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் இன்டர்னஷனல் க்ரைஸிஸ் குரூப் என்ற சர்வதேச நெருக்கடிகள் குறித்த அமைப்பு இலங்கை அரசின் மூர்க்கத்தனம் மற்றும் கருத்து மாறுபடுபவர்களை சகித்துக்கொள்ளாத தன்மை காரணமாக அங்கு மீண்டும் மோதல் எழக்கூடிய அபாயம் இருப்பதாகக் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசு புலிகளை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோற்கடித்ததிலிருந்து, சிறுபான்மை தமிழர்களின் குறைகளை அங்கீகரிக்கவோ அல்லது தீர்க்கவோ தவறிவிட்டது என்று அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஒரு புதிய அறிக்கையில் கூறியிருக்கிறது.
இலங்கையில் போர் முடிந்துள்ளதன் பின்னணியில் அங்கு பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழுவான ஐசிஜி சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், பரந்துபட்ட அளவிலான விமர்சனங்களை இலங்கை அரசின் மீது முன்வைத்துள்ள ஐசிஜி, கடந்தகால முரண்பாடுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதை விட, இலங்கை அதன் கொள்கைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நல்லிணக்க முயற்சிகளிலிருந்து தொலைவிலேயே தள்ளி வைத்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment