Thursday, July 7, 2011

முன்னாள் இராணுவ அதிகாரிகளை தூதரகங்களுக்கு நியமிப்பது உகந்ததல்ல-ஜோன் அமரதுங்க

தூதரகங்களுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் இலங்கையில் இராணுவ ஆட்சி நிலவும் எண்ணம் தோன்றுவதாகவும் இத்தகைய நியமனங்களை வழங்குவது உகந்ததல்ல எனவும எதிர் கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்
இந்த நடவடிக்கையின் பலனாக தொழில் அனுபவமற்ற பலர் தூதரக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்ந நிலையில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com