Sunday, July 3, 2011

இது எப்படி இருக்கு?

கிழக்கிலங்கையில் எலியும் பூனையுமாக பரம வைராக்கியத்துடன் அரசியல் நாடாத்திவருகின்ற கருணாவும் பிள்ளையானும் அண்மையில் ஒருவாகனத்தில் பயணம் செய்ததுடன் மிகவும் சிறந்த நண்பர்கள்போன்று சம்பாஷனையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அண்மையில் தொப்பிகல பிரதேசத்திற்கு அமைச்சர் பசில் ராஜபக்ச விஜயம் செய்தபோது அவரின் வாகனத்தில் சென்ற இவர்கள் இருவரும் தமது கோழிச்சண்டையை மறந்து நெருங்கிய நண்பர்கள்போல் செயற்பட்டதாக சிங்கள மீடியா ஒன்றின் கேலி நிகழ்சி ஒன்றின்போது விமர்சிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொப்பிகல சென்றிருந்த பசில் ராஜபக்ச அங்கு நிலம் பதனிடும் வண்டியை செலுத்தியதாகவும் அவ்வேளையில் இவர்கள் இருவரும் குரங்கு குட்டிகள்போன்று பசிலின் இருபக்கமும் ஒட்டிக்கொண்டிருந்தாகவும் அங்கு மேலும் கேலி செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com