பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் செல்வோரின் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் செல்வோரிடம் இதுவரை காலமும் அறவிடப்பட்ட அபராதத் தொகை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.ரயில்களின் மூன்றாம் வகுப்பில் பயணச்சீட்டு இன்றி செல்வோரிடம் இதுவரை காலமும் 300 ரூபா அபராதம் அறவிடப்பட்டது. புதிய நடைமுறைக்கு அமைய இந்த தொகை 900 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.பயணச்சீட்டு இல்லாதவர்கள் இந்த அபராதத்துடன் பயணச்சீட்டின் பெறுமதியில் இரட்டிப்புக் கட்டணத்தையும் ரயில்வே திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும் என விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் வகுப்பு பயணிகளிடம் அறவிடப்பட்ட 800 ரூபாஅபராதம் தற்போது ஆயிரத்து 200 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களும் பயணச்சீட்டின் பெறுமதிக்கு அமைய இரட்டிப்பு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணச்சீட்டுக்கள் இன்றி முதலாம் வகுப்பில் பயணிப்போருக்கு இதுவரை காலமும் 1100 ரூhபா அபராதம் விதிக்கப்பட்டது.அந்தத் தொகை தற்போது 1650 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பயணச்சீட்டின் பெறுமதியில் இரண்டு மடங்கு கட்டணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணச்சீட்டுக்களை பெற்று ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment