சட்ட விரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க ஏற்பாடு-பிரதி பொலிஸ் மா அதிபர்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட விரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பாக பொலிஸ் நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகதேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்
அத்தடன் தேர்தலுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment