ராகுல்காந்தியைக் கொல்ல சதியா? துப்பாக்கியுடன் மர்ம மனிதன் கைது.
உத்திரபிரதேசம் மாநில விவசாயிகள் குறைகள் கேட்பதற்காக ராகுல் 3 நாள் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இம்மாநிலத்தில் விவசாயிகளின் நிலம் அபகரிப்பு மற்றும் இது தொடர்பான போராட்டத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறவும், பிரச்னைகளை நேரில் கேட்டறியவும் ராகுல் யாத்திரையாக சென்று வருகிறார். இவரது இந்த யாத்திரைக்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் யாத்திரை செல்லும் வழியில் ஒருநபர் கைத்துப்பாக்கியுடன் ராகுலை பின்தொடர்ந்து வந்தார். இதனை பார்த்த ஸ்பெஷல் போலீஸ் படையினர் இவரை மல்லுக்கட்டி பிடித்து, கையில் இருந்த துப்பாக்கியை பறித்தனர். உதய்ப்பூர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞர் ஹரிசிஷன்சர்மா ( 32 ) என தெரியவந்துள்ளது. இவர் என்ன காரணத்திற்காக துப்பாக்கியை கொண்டு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். உ .பி., மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்று கூறி வரும் வேளையில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபரால் மேலும் மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment