சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவர் மீது புதிய செக்ஸ் குற்றச்சாட்டு.
சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவர் டாமினிக் ஸ்டிராஸ் கான் (வயது 62). ஓட்டல் ஒன்றில் பணிபெண்ணுடன் தவறாக நடக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் பதவி விலகினார். விசாரணைக்கு பின் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ட்ரிஸ்டேன் பேனன் என்பவர் தான் 22 வயதில் ஸ்டிராஸை ஒரு நிகழ்ச்சிக்கு பேட்டி காண சென்ற போது அவர் தன்னை கற்பழிக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். அடுத்த பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட கூடிய சூழ்நிலையில் அடுக்கடுக்கான செக்ஸ் குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுப்பப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment