இலங்கைக்கு வந்தால் கண்டதுண்டமாக வெட்டுவோம். யார் இந்த புச்சர்கள்?
வானொலி ஒன்றின் அறிவிப்பாளரும் அவரது காதலியும் இணைந்து புலம்பெயர் நாடுகளிலுள்ளோரிடம் கோடிக்கணக்கான பணத்தினை மோசடிசெய்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றது. இம்மோசடி தொடர்பாக கேள்வியுற்ற ஊடகங்கள் பல குறிப்பிட்ட அறிவிப்பாளரை தொடர்பு கொண்டபோது அவரும் அவரது சகாக்களும் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
லண்டனை தளமாக கொண்டுள்ள இணையத்தளம் ஒன்று அவர்களை தொடர்பு கொண்டபோது நீங்கள் இலங்கை வந்தால் கண்ட துண்டமாக வெட்டி எறிவோம் என இணையதளத்தினரை மிரட்டிய தொலைபேசி ஒலிப்பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோர் தமது பணத்தினை கேட்டு தொபேசி அழைப்புக்களை ஏற்படுத்துகின்றபோது குறிப்பிட்ட வானொலி அறிவிப்பாளரும் அவர் சகாக்களும் தாம் இலங்கையில் வழர்ந்துவரும் மிகவும் சக்தி மிக்க அரசியல்வாதி ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளதாகவும் பாதுகாப்புதரப்பினர் தம்மீது நடவடிக்கை மேற்கொள்ளமுடியாது எனவும் மிரட்டிவருவதாகவும் அறியமுடிகின்றது.
இது குறித்து அரச புலனாய்வுத்துறையின் உயர்மட்டத்தினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் நியாயமாக இடம்பெறுமா என்ற ஆதங்கத்துடன் பலரும் நிலைமைகளை அவதானித்துவருகின்றனர்.
ஜெய்சன் எனப்படும் அறிவிப்பாளரின் சகஅறிவிப்பாளர் ஒருவரே இவ்வொலிப்பதிவில் கொலைமிரட்டல் விடுத்தவராவார். இவரை இனம்காண்பதற்கு உதவுமாறு வாசகர்களை வேண்டுகின்றோம்.
0 comments :
Post a Comment