மூக்குடைபடுகிறது அமெரிக்கா. கான் பாலியல் குற்றச்சாடிலிருந்து விடுதலையாகின்றார்.
செக்ஸ் புகாரில் கைது செய்யப்பட்ட ஐஎம்எப்பின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் மீதான குற்றச்சாட்டுக்கள் அவரை மிரட்டிப்பணம் பறிக்க புனையப்பட்டவையென நிருமனமாகின்றது. அமெரிக்காவின் மேன்ஹாட்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அந்த ஓட்டலில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், ஸ்ட்ராஸ்கான் மீது பாலியல் புகார் கூறினார். இதையடுத்து, பிரான்ஸ் செல்வதற்காக விமானத்தில் ஏறிய ஸ்ட்ராஸ்கானை போலீசார் கைது செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டை ஸ்ட்ராஸ்கான் மறுத்தார். பாலியல் புகார் காரணமாக ஐ.எம்.எப். தலைவர் பதவியை ஸ்ட்ராஸ்கான் ராஜினாமா செய்ய நேர்ந்தது. ஓட்டல் ஊழியரின் புகாரில் சந்தேகம் எழுந்ததால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஸ்ட்ராஸ்கான் நேற்று விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பெண் ஊழியர் பொய் புகார் கூறியதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஸ்ட்ராஸ்கானிடம் பணம் பறிக்க திட்டமிட்டதை பெண் ஊழியர், போன் மூலம் தனது காதலனிடம் கூறியுள்ளார். கினியா பகுதியை சேர்ந்த அந்தப் பெண் ஊழியர், தனது தாய்மொழியில் பேசிய உரையாடலின் பதிவை விசாரணை அதிகாரிகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். அதில் பொய் புகார் அம்பலமானது. மேலும், ஸ்ட்ராஸ்கான் அறையில் நுழைந்ததாக பெண் ஊழியர் கூறிய நேரமும் கதவின் எலக்ட்ரானிக் கார்டு கீ தகவலும் முரண்பாடாக இருந்தது.
இதை வைத்து பெண் ஊழியர் பொய் புகார் கூறியதை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதுகுறித்து கோர்ட் விசாரணையில் பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் கதறி அழுதார். ஸ்ட்ராஸ்கான் மீதான குற்றச்சாட்டு வலுவிழந்து வருவதால், அவர் இந்த வழக்கில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.
ÔÔஆரம்பம் முதலே இந்த பெண் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறி வருகிறார். மேலும் இந்த பெண்ணுக்கு போதை கடத்தல் மற்றும் கறுப்பு பண கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இவரது வாக்குமூலம் நம்பக்கூடியதாக இல்லைÕÕ என்று புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்சைச் சேர்ந்த ஸ்ட்ராஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். இவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் சதி செய்துள்ளதாக இவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிணைக்காக ஸ்டோர்ஸ் கான் செலுத்திய ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச்செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம் பிணையற்ற விடுதலையை அவருக்கு வழங்கியுள்ளது.
வழக்கு விசாரணைகளில் தொடர்ந்து ஆஜராவதாக ஸ்டோர்ஸ் கான் வழங்கிய உறுதிமொழியை அடுத்து அவரை விடுதலை செய்ய சட்டத்தரணிகள் இணக்கம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தற்போது முறிவடையும் தருணத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
62 வயதான பிரான்ஸ்சின் சிரேஷ்ட அரசியல்வாதியான ஸ்டோர்ஸ் கான் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment