நாளை ரணில் - பான் கீ மூன் சந்திப்பு
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க உயரதிகாரிகள் சிலரை நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கை காரியாலயத்திற்கான பிரதி துணை செயலாளர் அலிசியா அயர்சை நேற்று சந்தித்து கலந்துரையாடிய ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment