Friday, July 1, 2011

அனைத்துலக நிதி ஆணையத்தின் முதல் பெண் தலைவராக கிறிஸ்டைன் தேர்வு.

அனைத்துலக நிதி ஆணையத்தின் (ஐஎம்எஃப்) தலைவராக பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டைன் லகார்டே வாஷிங்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அனைத்துலக நிதி அமைப்பின் முதலாவது பெண் தலைவர் என்கிற பெருமையை கிறிஸ்டைன் பெறுகிறார்.

ஐஎம்எஃப் தலைவராக இருந்த டாம்னிக் ஸ்டிராஸ் கானின் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்டிராஸ் கான் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

எனவே ஐஎம்எஃபின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. புதிய தலைவர் பதவிக்கான போட்டியில் மெக்ஸிகோ மத்திய வங்கி ஆளுநர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ், கிறிஸ்டைன் ஆகி யோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்நிலையில் ஐஎம்எஃப் அமைப்பின் செயற்குழு வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை கூடியது. அதில் அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் கிறிஸ்டைன் லகார்டே புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் தற்போது பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதேநேரம் இவர் மீதான வழக்கு விசாரணை ஒன்று பிராண்ஸில் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com