நுகேகொடையில் சுற்றிவளைப்புத் தேடுதல் , 77 பேர் கைது.
நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது, பிடியாணை பிறப்பித்த பின்பு யாருக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்த 77 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடை பொலிஸ் நிலைய புலானாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீரென 13 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பலர் பல வருடகாலமாக தலைமறைவாகி வாழ்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கு நபர்கள் உரிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக நுகேகொடை பொலிஸ் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment