நஞ்சூட்டப்பட்ட நீரைப் பருகியதில் 75 மாணவர்கள் வைத்தியசாலையில்.
சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நஞ்சூட்டப்பட்ட குடிநீர் விவகாரத்தால் பாடசாலை அல்லோலகல்லோலப்பட்டது. 74 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
சம்பவத்தில் சுமார் 150 மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பலர் பாடசாலையிலேயே முதலுதவி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர்கள் மயக்கம் மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதிகாரிகள், அவர்களுக்கு சேலைன் வழங்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment