சனல் 4 குற்றச்சாட்டுக்கள் நல்லிணக்கத்திற்கு தடையாக அமைகின்றது. ரஜீவ! (படங்கள் இணைப்பு)
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் பலர் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசகரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர். ஆங்கு அவர் பேசிய விடயங்கள் தொடர்பாக பிரித்தானிய தூதரகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நிபுணர்குழு அறிக்கை மற்றும் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் போன்றன இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தடையாக அமைகின்றன என்று ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு வெளியே உள்ள பிரிவினைவாத சக்திகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.
சனல் 4 குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் நல்லிணக்கம் என்ற தலைப்பில் விளக்கமளிக்கையில் ரஜீவ விஜேசிங்க இதனைத் தெரிவித்தார். போருக்குப் பின்னரான மீள்கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் பல பிரதேசங்களில் இந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது சர்வதேச சமூகத்திடமிருந்து தடைகள் ஏற்படுவது கவலையளிக்கின்றது.
பொதுவான அணுகுமுறையின் கீழ், நேர்மறையான எண்ணங்களை விடுத்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட சர்வதேச முகவர்கள் உதவி செய்யவேண்டும் என்று ரஜீவ விஜேசிங்க வேண்டுகோள் விடுத்தார்.
பொருத்தமான அரசியல் தீர்வொன்றை விரைவில் பெற்றுக்கொள்ளும்முகமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ச்சியான பேச்சுக்களை நடாத்திவருகிறோம்.
மொழி உரிமைகள் மற்றும் பயிற்சிகள், பொறுப்பு மற்றும் தொடர்பாடல் போன்ற விடயங்கள் தொடர்பாக கேள்வி- பதில் அமர்வாக ரஜீவ விஜேசிங்கவுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment