ரயில்-பஸ் விபத்து 33 பேர் பலி
உத்தர பிரதேச மாநிலம் கான்ஷிராம் நகரில் ரயிலுடன்,பஸ் மோதிக்கொண்டதில் 33 பேர் பரிதாபமாக பலியாகினர் இன்று காலை,இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஈடா எனும் இடம் அருகே திருமணத்திற்கு சென்றவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த பஸ் அங்கிருந்த ரயில்வே கடவையை கடக்க முயற்சித்தவேளை, மிகவேகமாக வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதியதால் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இக்கோர விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 நிதியும் வழங்க உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment