நோர்வேயியின் தலைநகர் ஒஸ்லோவில் அரச கட்டிடமொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஸ்தலத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்தும் இருவர் நிலமை கவலைக்கிடமாகவுள்ளதாக நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றது.
நாட்டின் பிரதமரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இத்தாக்குதலின் பின்னணி தொடர்பாக இதுவரை எந்த தகவல்களும் இல்லை.
தாக்குதல் இடம்பெற்ற கட்டித்திற்கு பக்கத்துகட்டிடத்திலேயே பிரதமர் இருந்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் வடிவம் தொடர்பாக தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம் ஒஸ்லோவிற்கு அருகிலுள்ள தீவு ஒன்றினுள் நுழைந்த தாக்குதல்தாரிகள் அத்தீவினுள் தங்கயிருந்த தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களான இளைஞர் யுவதிகளை கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றுள்ளனர். இதில் 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றது. இவர்களில் 16 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment