Monday, July 11, 2011

முறைப்பாடுகள் வழங்கப்பட்டு 30 நிமிடங்களுள் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொழும்பு நகரில் முச்சக்கர வண்டிகள் வான்களின் ஊடாக உணவு விற்பனையில் ஈடுபடுபவர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் உட்கொள்ளும் உணவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக, நடமாடும் உணவு விற்பனை வாகனங்களை பதிவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளுக்கு உணவு பரிசோதகர் ஒருவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு திர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக உணவு பரிசோதகர்களை இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் உணவு விற்பனை வாகனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 011 2776161 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியுமென கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி கூறினார்.
முறைப்பாடுகள் வழங்கப்பட்டு 30 நிமிடங்களுள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.





1 comments :

Anonymous ,  July 11, 2011 at 2:29 PM  

There are possiblities,the contagious diseases
can spread through the unhygenic
food items sold in the public places.
We welcome the steps taken by the
health authorities to prevent the
consumption of unhealthy food
by the public.The eating houses also should bring under the strict control of the health authorities.Health conscious consumers want information about the food they buy.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com