302 முன்னாள் போராளிகள் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர்
புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள 302 முன்னாள் போராளிகள் இம்முறை கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரால் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள மத்திய நிலையமொன்றிலேயே இவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரிட்சையில் தோற்றவுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கான கற்பித்தல் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர்களுக்கு வார இருதி நாட்களில் விசேட கருத்தரங்குகள் நடாத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.இதனை தவிர நீதி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் விசேட வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் மேஜர் ஜெனரால் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்
புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 361 பேர் கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொது தராதரப் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment