வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோரின் குறைந்தபட்சவயதை 30ஆகஉயர்த்த திட்டம்
வீட்டுப்பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் குறைந்த பட்ச வயதெல்லையை அதிகரிப்பது குறித்து வெளிநாட்டு வேலை வாயப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு ஆலோசித்து வருகின்றது.இதற்கமைய
வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் குறைந்த பட்ச வயதை 30ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.
இந்த நடைமுறையை இன்னும் மூன்று வருடங்களுக்குள் செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்களின் குறைந்த பட்ச வயதை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தும் வகையில் தாம் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளகவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறைந்த வயதில் வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு வயது எல்லையை படிப்படியாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக வெளிநாட்டு லேவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment