சரத் பொன்சேகாவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு
முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, ஏ.பி ரத்நாயக்க மற்றும் பிரியசாத் டெப் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் சரத் பொன்சேகாவின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சரத் பொன்சேகா சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாமல் மூன்று நீதிபதிகளும் சட்டத்தரணியும் பக்கசார்பாக செயற்பட்டமையால் அவர்களின் தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பளிக்குமாறு சரத் பொன்சேகா தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அறிக்கையில் விசாரணைகளில் கலந்து கொள்ளாத நீதிபதியொருவரின் கையொப்பமும் அடங்கியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதில் அந்த நடவடிக்கையில் தமது சட்டத்தரணி தொடர்புபடுத்தப்படவில்லை எனவும் சரத் பொன்சேகாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு முன்னால் இராணுவத்தளபதி உயர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகா மேன்முறையீட்டு மனுவை எதிர் வரும் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment