பிரான்சில் 11வது உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்க மாநாடு செப் 24,25. 2011
பேராளர்கள் விண்ணப்பிக்கலாம்
உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் 11வது சர்வதேச மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 24,25ம் திகதிகளில் பிரான்ஸ் எவ்ரியில் நடைபெறவுள்ளது. உலகப் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களும், 300க்கு மேற்பட்ட பேராளர்களும், பார்வையாளர்களும் இம் மாநாட்டில் பங்குபற்ற உள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். செப்24ம் நாள் ஆய்வரங்கமும் 25ம் நாள் உலகப்புகழ் பெற்ற தமிழியல் அறிஞர்கள் உரையும் கலை,நூல் ஆவண, ஓவியக் கண்காட்சி நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
புலம் பெயர் தமிழரின் தமிழ்மொழி அறிவு, தமிழ்ப்பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றைப் போற்றுவதிலும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதிலும், பொருளாதார, சமூகத்துறைகளில் மேம்பாடு காண்பதிலும் உள்ள அறைகூவல்களை எதிர்கொண்டு முனைப்புடன் செயற்படும் நோக்குடன் உலகத்தமிழர் பண்பாடு, கலை கலாசார, வாழ்வியல் மேம்பாடு எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
நடைபெறும் இடம் - Le Theatre de l‘ Agora, 91000 EVRY , FRANCE
உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைத்து உலகத்தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்னும் குறிக்கொளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின்கீழ் செயற்படுவதற்கும்;, தமிழ் மொழியை மறந்து போனவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கையுடனும் 1974 ஜனவரி 8ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராட்சி மாநாட்டில் பல அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தை ஏற்படுத்தினர். இவ்வியக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுத் தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து பங்குபற்றுபவர்களின் உள்ளுர் பயண ஏற்பாடுகளை உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கம் செய்துள்ளது. விடுதியில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு 24 சனி, 25 ஞயிறு ஆகிய தினங்களில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 26ம் திகதி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு நினைவளிப்பு, கட்டுரையாளர், சிறப்புப் பேச்சாளர் மற்றும் பேராளர் ஆகியோருக்கு மாநாட்டு நினைவளிப்பு வழங்கப்படும். தமிழ்ப்பண்பாட்டுச் சிறப்பை எடுத்துக்காட்டும் கலை நிகழ்ச்சி 25ம் திகதி இடம்பெறும். மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்கள் அனைவரும் அடையாள அட்டைகள் அணிந்திருத்தல் அவசியம். செப். 23-24-25-26 ஆகிய நான்கு தினங்களுக்கும் உணவு வழங்கப்படும். மாநாட்டில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொண்ட பேராளர்களுக்கு மட்டும் உறைவிடம் வழங்கப்படும். இசைவளிக்காதவர்களுக்கு உறைவிட வசதிக்கு இயக்கம் பொறுப்பேற்க இயலாது.
கட்டணம்- பேராளர் தனிநபருக்கு 150யூரோக்கள். பதிவுப்படிவத்துடன் MICTEUF என்ற பெயரில் வரைவோலை (Draft) எடுத்து கஸ்ட் 15ம் நாளுக்குள் மாநாட்டுத்தலைமையகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
முகவரி 5, ARue Geoffroy st Hllaire, 91000 EVRY-FRANCE MICTEUF
E.mail - mictefr@hotmail.fr Tp.0033761274565, 0033609860154
அன்புடன்
சரவணையூர் விசு.செல்வராசா. (மாநாட்டுத்தலைவர்)
துரை கணேசலிங்கம். (மாநாட்டு எற்பாட்டாளர் ) E.mail- imtc1974@yahoo.com
0 comments :
Post a Comment