யாழ்பாணத்தில் எது நடத்தாலும் முதலில் அமெரிக்க தூதரகத்திலேயே முறையிடப்படுகின்றது.
இலங்கையில் எது நடந்தாலும் பொலிஸாருக்கு முன்னர் வெளிநாட்டு தூதரகங்களில் முறையிடும் துர்பாக்கிய நிலையொன்று தோன்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டிற்காக தமது உயிரை அர்ப்பணிப்புச் செய்த இராணுவத்திருக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சிறிய சம்பவம் தொடர்பில், காவல்துறையினருக்கு முறையிடுவதற்கு முன்னர், அமெரிக்க தூதுவராலயத்திடம் முறையிடப்பட்டுள்ளது எனவும் கட்டுநாயக்க போராட்டம் தொடர்பாக முதலில் ஜேமன் தூதுவரே தமக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புலிகளை வெற்றி கொண்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தீங்கு விளைவிக்க சர்வதேசம் மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அளவெட்டி பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு இனந் தெரியாதோரின் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனினும். இந்த செயற்பாடு ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இதனுடன் ராணுவத்தினருக்கு தொடர்பு இல்லையென குறிப்பிட்ட அவர், கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகள் காரணமாக அதனைச் சார்ந்த ஒரு தரப்பினரே திட்டமிட்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தமது தரப்பினருக்கு தொடர்பில்லை என தெரிவித்த ராணுவ ஊடக பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment