குப்பைகளை அகற்றும் வேலைகள் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது
காலிமுகத் திடல், ஹூணுப்பிட்டி கங்காராம பிரதேசங்களில் குவியும் குப்பைகளை அகற்றும் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கடற்படைத் தலைமையகத்திற்கு வழங்கியுள்ளார். இதுவரை கொழும்பு மாநகர சபையே இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது.
காலிமுகத் திடலின் துப்பரவுப் பணிகளை அதிகாலை 6 .30 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் குப்பைகளை அகற்றும் பணிகளை கொழும்பு மாநகர சபை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை கடற்படையினரிடம்
ஒப்படைத்தமை குறித்து, கடற்படையினர் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும், அந்த பணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு, துப்பரவுப் பணிகளில் 40 கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment