தன்னைத்தானே சுட்டு சிப்பாய் தற்கொலை
இயக்கச்சிப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படைச் சிப்பாய் ஒருவர் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இப் பகுதியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 19 வயதுடைய வசந்த என்ற படைச்சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இவரது சடலத்தை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு உத்திரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி இராணுவக் காவற்றுறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment