கே.பி யை அரசசாட்சியாக்கி போர்க்குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்படும். அரசு.
இலங்கை அரசாங்கத்தின் மிகவும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்ற புலிகளுக்கான முன்னாள் ஆயுதக்கடத்தல் மன்னன் கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதனை தேவையேற்படின் அரச சாட்சியமாக மாற்றி இலங்கை மீது உலக நாடுகள் மேற்கொள்ளுகின்ற போர்குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஜரோப்பாவில் உள்ள புலிகளை அடயாளம் காணவும் அவர்களின் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவும் இலங்கை அரசு இலங்கை அரசியல் அமைப்பு சட்டபடி சந்தேக நபர் ஒருவரை குறித்த குற்றச் செயலின் சாட்சியாக பயன்படுத்த முடியும் என்பதற்கமைய அரச சாட்சியாக கே.பி மாற்றப்படலாம் என்று அவர் மேலும் தெரித்துள்ளனர்.
0 comments :
Post a Comment