நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க அன்னிய சக்திகள் சதி! விமல் வீரவன்ச
இலங்கையின் அபிவிருத்தியை தடுக்கவென தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான சக்திகள் செயற்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதை தடுக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான சக்திகள் உள்ளன. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென அயல்நாட்டின் முதலமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
இந்த நாடு இன்று சமாதானத்துடன் மேலெழுகிறது. அபிவிருத்தி அடைகிறது. மேலும் சில சர்வதேச நாடுகளின் சக்திகள் இன்று யுத்தக் குற்றம் என்ற பெயரில் ஆவணப்படங்களை வெளியிடுகின்றன.
சனல் 4 இக்காட்சிகளை ஒளிபரப்பி மீண்டும் எம்மை இருண்ட யுகத்திற்கு இழுத்துச் செல்ல முற்படுகிறது. எவ்வாறான சக்திகள் செயற்படுகின்றன என எமக்குத் தெரிகிறது.
அந்த அனைத்து சக்திகளுக்கும் முகம்கொடுக்க வேண்டுமானால் சமாதானத்துடன் ஒன்றிணைய வேண்டும். நாம் பிரிந்தால், அசந்துபோனால் நிறுவனத்திலும், நாட்டிலும் முன்னேற்றம் ஏற்படாது என்றார் அமைச்சர் விமல் விரவன்ச.
0 comments :
Post a Comment