மசாஜ் பண்ணினால் அதிக சம்பளம். நியுயோர்க்கில் இந்திய தூதரக அதிகாரி மீது பாலியல் வழக்கு.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மீது பாலியல் அத்துமீறல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவரது வீட்டு பணிப்பெண் அமெரிக்க தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனினும் குற்றச்சாட்டுகளை தூதரக அதிகாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். நியூயார்க் இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர் பிரபு தயாள். இவரது வீட்டில் சந்தோஷ் பரத்வாஜ் (45) என்ற பெண், வீட்டு வேலை செய்தார்.
தற்போது பிரபு தயாள் மீது அவர் தொழிலாளர் நீதிமன்றத்தில் சந்தோஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். Ôஒரு மணி நேரத்துக்கு 10 டாலர் சம்பளம், கூடுதல் வேலைக்கு தனி சம்பளம் என ஆசை வார்த்தை கூறி என்னை பிரபு தயாள் அழைத்து வந்தார். ஆனால், மாதம் 300 டாலர் (ஸி13,500) மட்டுமே எனக்கு வழங்கப்படுகிறது. நீண்ட நேரம் வேலை தருகிறார். கூடுதல் சம்பளமும் தருவதில்லை. கிடங்கு அறையில் தூங்க வைக்கின்றனர். மசாஜ் செய்தால்தான் கூடுதல் சம்பளம் என பிரபு தயாள் கூறுகிறார். இது பாலியல் அத்துமீறலாகும் என கூறியுள்ளார். குற்றச்சாட்டை பிரபு தயாள் மறுத்துள்ளார்.
0 comments :
Post a Comment