Tuesday, June 14, 2011

புலிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கை பயணம்.

புலிகளின் செயற்பாடுகுள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நெதர்லாந்தில் புலிச் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் இந்த நடவடிக்கைக்கு 'ஒபரேசன் கொனிக்' என பெயரிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நீதி அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றினால் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து நீதி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்படுமா அல்லது வேறும் தரப்பினரிடம் விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நெதர்லாந்திலிருந்து புலிகள் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், இவை தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 13 புலித் தலைவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸிடம் நெதர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு வானொலியொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்து நீதவான்களும், சட்டத்தரணிகளும் விசாரணைக்களுக்காக அமெரிக்காவிற்கும் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com