Sunday, June 12, 2011

கருணாநிதியின் மாத வருமானம் வெளியிட்ட ஜெயலலிதா

இலவச கலர் "டிவி' வழங்குவதற்காக 7.48 லட்சம் "டிவி'கள் சப்ளை செய்வதற்கான ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1.27 லட்சம் கலர் "டிவி'க்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக் கூடங்கள், ஊராட்சிகள், துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். "ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் கருணாநிதி குடும்பம் பெற்றது, 20 ஆயிரம் கோடி ரூபாய்' என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார்.

இந்த கலர் "டிவி'யை பார்க்க கட்டணம் பெற்றது, கேபிள் தொழிலில் கோலேச்சி இருக்கும் கருணாநிதியின் பேரன்கள், கலாநிதி, தயாநிதி, துரை தயாநிதி போன்றவர்கள் தான். கருணாநிதியின் குடும்பத்துக்கு கேபிள் கட்டணமாக, ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் மக்கள் செலுத்தினர்.மக்கள் வரிப்பணத்தில், 3,687 கோடி செலவழித்து, ஆண்டுக்கு 4,000 கோடி தனது குடும்பம் பெற வழி செய்துவிட்டார். ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் அந்த குடும்பம் பெற்றது 20 ஆயிரம் கோடி ரூபாய். எனவே, கலர் "டிவி' வழங்கும் திட்டம், சொந்த நலனுக்காக தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என ஆணித்தரமாக சொல்வேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com