பாக். முஷாரப்பின் முன்னாள் உதவியாளரான இராணுவ அதிகாரி தற்கொலை
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு உதவியாளராக செயல்பட்ட இராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். முஷாரப்புக்கு உதவியாளராக செயல்பட்ட அவர், கடந்த 2004 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அலியின் படுக்கை அறையை ஒட்டிய குளியறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், குளியல் அறையை உடைத்து திறந்தபோது, அங்கு அலி ரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
அலி நடத்திவந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனம் பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவர் துயரத்தில் இருந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
எனினும் அலியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் "டெய்லி டைம்ஸ்" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அலி வலது கை பழக்கம் உடையவர்.ஆனால் துப்பாக்கிக் குண்டு தலையின் இடது பக்கத்தில் பாய்ந்துள்ளது.மேலும் அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியில் கைரேகைகள் எதுவும் இல்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment