டக்கிளசுக்கு உள்ளேயும் : வெளியேயும் எதிர்ப்பு : முதலமைச்சர் கனவு பலிக்குமா?
வட மாகாண சபை தேர்தலில் வீணையை ஒருபக்கத்தில் வைத்துவிட்டு ஆழும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்வறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஆழும் கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது எதிர்பினை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுமாயின் தமது கட்சி மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுமென அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த யாழ் மாநகர சபை தேர்தலின் போது அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு பிரதி மேயர் பதவி தருவதாக கூறி ஏமாற்றியமையினாலேயே ஈ.பி.டி.பியுடன் இணைந்து போட்டியிட விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார்:
கடந்த யாழ் மாநகர சபை தேர்தலின் போது ஈ.பி.டி.பி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டன.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை கைப்பற்றியத்திற்கினங்க ஒரு வருட காலத்திற்கு பிரதி மேயர் பதவி வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் றிசாட் பதியுதீனுடனான சந்திப்பில் உறுதியளித்திருந்தார்.
எனினும் இந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படாமையினாலேயே வட மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் யாழ் மாவட்ட மாநகர சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்த தமது கட்சி உறுப்பினரான றேகன் என்பவரை டக்கிளஸ் பின்தள்ளி யோகேஸ்வரியை முதல்வராக்கியிருந்தார். அதன் விளைவாக கட்சியினுள் தொடர்ந்தும் பல உட்பூசல்கள் நிலவி வருகின்றது. இது எதிர்வரும் தேர்தலில் எதிர்விளைவுகளை கொடுக்கலாம் எனவும் எதிர்கூறப்படுகின்றது.
மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட சகல தமிழ் கட்சிகளும் டக்கிளசுடன் கடும்போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர்.
கடந்த பாராளுமன்றதேர்தலில் கூட அழையாவிருந்தாளியாகவே டக்கிளஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டுடன் இணைந்து கொண்டதாக அத்தருணத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் பட்டுவெட்டிக்கு ஆசைப்பட்டு கோவணத்தை இழந்த கதி டக்கிளசின் பாராளுமன்ற மற்றும் அமைச்சர் பதவிக்கு ஏற்பட்டுவிடுமா எனவும் அவ்வாறு நிகழ்ந்தால் தங்கள் கதி என்னாகும் எனவும் அவரில் தங்கி வாழுகின்ற ஐரோப்பிய ஈபிடிபியினர் அங்கலாய்வதாக அறியமுடிகன்றது.
1 comments :
Hon Dackless Devananda never a politician for any of community in srilanka. He worked as a gang leader, So we can't expect any of strong decision from him or his party.
Post a Comment