யாழில் இருவேறு இடங்களில் இருவர் தூக்கில் தொங்கி தற்கொலை.
யாழ். மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள அதேநேரம் யாழ். சுன்னாகம், கந்தரோடையில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை சுன்னாகம் பொலிஸார் நேற்றுக் காலை மீட்டுள்ளனர்.
மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய வேல்சிவம் தர்சனவதனி என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக இளவாலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தரோடை மேற்கைச் சேர்ந்த த.யோகேந்திரன் (வயது40) என்ற குடும்பஸ்தரின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது. பிரஸ்தாப நபரின் குடும்பத்தினரின் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர். சம்பவ இடத்தில் மல்லாகம் பதில் நீதிவான் பி.ஜே.அன்ரனி மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் பிரஸ்தாப நபர் தனியே இருந்துள்ளார். அவரது குடும்பத்தவர்கள் அயலிலுள்ள தமது உறவினர் வீட்டில் அன்றைய தினம் இரவு தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் காலையில் வீட்டுக்குச் சென்று பார்த்த போது யோகேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் அவர் மதுபோதையில் காணப்பட்டதுடன் தனது மனைவி யைக் கத்தியால் வெட்டி காயப்படுத்திய தாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment