சரத் பொன்சேகாவை மஹிந்தவிடம் மண்டியிட வைக்க புதிய யுக்தி!
இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனை குறித்து நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாது என சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 30 மாதகால சிறை தண்டனைக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது இராணுவ நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பை நாட்டின் தலைவர் மற்றும் முப்படைகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் கருத்து தெரிவித்த அரச பிரதி வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் அரசியல் யாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய இரண்டாவது இராணுவ நீதிமன்றின் தீர்ப்பை நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த தீர்ப்பிலிருந்து நிவாரணம் பெற வேண்டுமாயின் மனுவை ஜனாதிபதியிடம் சமர்பிக்க வேண்டுமென அரச பிரதி வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதன்படி குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment