கைகள் இன்றி வில்வித்தையில் கலக்கும் சாதனை மனிதர் .
இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் வரும் 2012-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க நாட்டை சேர்ந்த 28 வயதான மேட் ஸ்டட்ஸ்மேன் என்பவர் மிக ஆர்வமாக உள்ளார். இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? இவருக்கு இரு கைகளும் கிடையாது. மாறாக வில் மற்றும் அம்பினை பயன்படுத்துவதற்கு தனது கால்களையே நம்பியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான மேட் தனது 16 வயதில் வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ள தொடங்கி தற்போது அமெரிக்க வில்வித்தை குழுவில் 30 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று சாதனை படைப்பேன் என கூறும் இவர், பொழுதுபோக்கிற்காக வேட்டையாடுதல், மீன் பிடித்தல், போட்டிங் செய்தல் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் என்றிருந்தாலும், குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் கொடுத்தல், உடை மாற்றிவிடுதல், அவ்வப்போது சமைத்தல், தோட்டம் அமைத்தல் மற்றும் காரோட்டுதல் என மேட்டின் திறமை பளிச்சிடுகிறது. உடல் ஊனம் சாதனைக்கு தடையல்ல என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.
0 comments :
Post a Comment