Wednesday, June 15, 2011

பசுக்களை விற்றால் மரத்தில் கட்டி அடித்து சாணத்தை வாயினுள் திணிப்பேன். மேர்வின்.

தென் பிரதேசத்தில் விஷ்ணு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் கட்டடவழர்சிக்காக அரசு மற்றும் தனவந்தவர்களிடமிருந்து பெருந்தொகைப் பணமும் கிடைக்கப்பெற்றதாக தெரியவருகின்றது. இவ்வாலய அருகாமையில் வசிக்கும் வறுமை கோட்டின்கீழுள்ள குடும்பங்களுக்கு அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஏற்பாட்டில் 75 பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆலய நிகழ்வொன்றில் கலந்து விட்டு ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் தான் மக்களுக்கு வழங்கிய பசுக்களில் ஒன்றையேனும் எவராவது இறைச்சிக்காக விற்றால் அவர்களை கோவில் மரத்தில் கட்டிவைத்து அடித்து சாணத்தை அவர்கள் வாயினுள் திணிப்பேன் என தெரிவித்துள்ளார். இப்பசுக்களை பெற்றவர்கள் அவற்றை ஒழுங்கான முறையில் பராமரித்து அவற்றினால் வரும் வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவற்றை இறைச்சிக்காக விற்றுவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரத்தில் கட்டிவைத்து அடித்தமைக்காக நீதிமன்று செல்லத்தான் தயாராக இருப்பதாகவும், இதுவே மேர்வின் சில்வாவின் செயல்முறை எனவும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com