சர்வதேச நிதியத்தின் தலைவராகிறார் பிரான்சு பெண்மணி?
சர்வதேச நிதி அமைப்பான ஐ.எம்.எப்-ன் தலைவர் பதவியை வகித்து வந்த டாமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஓட்டல் பணிபெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பதவி விலகினார். அடுத்த தலைவராக வருவதற்கு மெக்சிகோ சென்டிரல் வங்கியின் தலைவர் அகஸ்டின் கார்ஸ்டன்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் (வயது 55) ஆகிய இருவர் போட்டியில் உள்ளனர். கடந்த 1945-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்புக்கு பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் முதன்முறையாக பிரான்சு நாட்டின் பெண்மணியான லகார்ட் இப்பதவிக்கு வர கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment