விபச்சாரத்திற்காக யாழ் பெண்களை மலேசியா அனுப்பும் புலிகளின் புலனாய்வுத்துறையினன் .
வடபகுதியிலிருந்து பல பெண்கள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழிலுக்கு என அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவருகின்றது. இந் நாசகார தொழிலில் புலிகளின் புலனாய்வுத் துறையில் மிக முக்கயஸ்தராகவிருந்து தற்போது இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு யாழில் தங்கியுள்ள நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
புலிகளின் புலனாய்வுத்துறையை சேர்ந்த இவரது வலையில் முன்னால் பெண்புலிகள் பலர் சிக்கியுள்ளதாக அறியமுடிகின்றது. இராணுவத்தினரின் புனர்வாழ்வு நிகழ்சி நிரல்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ள இப்பெண்போராளிகளை நெருங்கும் இந்நபர் தங்களுக்கு எதிர்காலத்தில் இடர்கள் நேரிடலாம் எனவும், மீண்டும் கைது செய்யப்படலாம் எனவும் அதற்கு மாற்றீடாக சிங்கப்பூ, மலேசியா போன்ற இடங்களில் ஓரிரு வருடங்கள் தொழில்செய்து வாழ்வை மேம்படுத்திக்கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறியே இவர் இப்பெண்புலிகள் பலரை ஏமாற்றியதாக அறியமுடிகின்றது.
குறிப்பிட்ட இந்நபரின் இப்பாதகச்செயலை மக்கள் இனம்கண்டுள்ளபோதும் அவர் தன்னை இலங்கை இராணுவத்தினருக்கும் , கே.பிக்கு நெருங்கியவராக மக்களிடம் காட்டிக்கொள்வதால் மக்கள் இவர் மீது அச்சம் கொண்டு நடவடிக்கையில் இறங்க அச்சம் கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment