பிரபாகரன் குடும்பம் உயிருடன் உள்ளதா? இலவச விளம்பரத்திற்கு அடித்தார் அஸ்வர் அந்தர் பல்டி.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் ஆழும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அஷ்வர் தெரிவித்திருந்தார். அவர் தெரிவிக்கும்போது அல்குவைதா இயக்கத் தலைவர் ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது அவரது மனைவியும் பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். ஆயினும் இறுதி யுத்தத்தின் போது நந்திக் கடலில் இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட போதும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கொல்லப்படவில்லை என்றும் அவரது பிள்ளைகளை எமது ஜனாதிபதி படிபித்தும் வருகிறார் அஸ்வர் எம்பி கூறியிருந்தார்.
அஸ்வரின் இலவச விளம்பரத்திற்கான மேற்படி கூற்று புலம்பெயர் தமிழருக்கும் ஊடகங்களுக்கும் ஒட்சிஸன் வழங்கிய செய்தியாக இருந்தது. இவ்வாறு அஸ்தர் இலவச விளம்பரம் தேடிக்கொண்ட அஸ்வர் தற்போது அந்தர் பல்டி அடித்து தனது கருத்தினை மறுத்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் தான் தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகளை குறிப்பிடுவதற்கு பதிலாக, பிரபாகரனின் பெயரை தவறாக குறிப்பிட்டு விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment