செஸ் விளையாடும் கடாபி
லிபியாவில் கடாபி தரப்பு மற்றும் எதிர் தரப்புக்கு இடையிலான மோதல், கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஜாவியா, பிரிகா, ஜின்டான் ஆகிய நகரங்களில் இரு தரப்புக்கிடையிலான மோதல்கள் வலு பெற்றுள்ளன. கடாபி ராணுவத்தின் இரு வெடிபொருள் கிடங்குகள் மீது, "நேட்டோ' விமானப் படைகள் நேற்று குண்டு வீசி தாக்கி அழித்தன.
இந்நிலையில், நேற்று லிபிய அரசு தொலைக்காட்சி, கடாபி தொடர்பான சில காட்சிகளை ஒளிபரப்பியது. அதில், உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவரும் ரஷ்யருமான கிர்சன் இலியும்ஷ்னோவ், கடாபியுடன் சதுரங்கம் விளையாடுவது இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிர்சன், "கடாபி, லிபியாவை விட்டு வெளியே போகப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். எந்தப் பதவியையும் வகிக்காத தன்னை பதவி விலகச் சொல்வது விசித்திரமாக உள்ளதாகவும் அவர் கூறினார்" என்றார்.
0 comments :
Post a Comment