ஆயுதக் கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
ஆயுதக் கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்த ஷிராணி திலகவர்தன ஆணைக்குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இராணுவத் தளவாட கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நீதவான் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. உயர் இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனவும், அறிக்கையை வெளியிடுவதன் மூலம் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆயுத கொடுக்கல் வாங்கல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவதன் மூலம் எவ்வாறு தேசியப் பாதுகாப்புக்கு எவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும் என திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அண்மையில் காவல்துறையினருக்கும் பணியாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக மஹானாம திலகரட்ன தனிநபர் ஆணைக்குழுவினை ஜனாதிபதி நியமித்திருந்தார்.
காலத்திற்கு காலம் அரசாங்கம் சில ஆணைக்குழுக்களை நியமிப்பதாகவும் அவற்றின் அறிக்கைகள் பற்றியோ எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியோ தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment